சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்

செய்முறை

பச்சரிசி – 200 கிராம்

 பயற்றம் பருப்பு – 1 பிடி

தூள் வெல்லம் – 100 கிராம்

ஒரு ஜாதிக்காயை உடைத்து அதிலிருந்து இரண்டு மிளகளவு மட்டும்

ஏலக்காய் – 4

முந்திரிப் பருப்பு – 8

உலர்ந்த திராட்சை – 8

நெய் – 1 கரண்டி

பால் – சிறிதளவு

விருப்பமிருந்தால் சேர்த்துக் கொள்ள:

கேசரி பவுடர் – 1 சிட்டிகை

குங்குமப் பூ – சிறிதளவு

பச்சைக் கற்பூரம் – சிறிதளவு

திராட்சையையும் முந்திரிப் பருப்பையும் தனித்தனியாக நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.

 அரிசியையும் பருப்பையும் நன்கு களைந்து சுமார் 200 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக அடி பிடிக்காமல் வேக வைக்கவும்.

குழைய வெந்ததும் வெல்லத் தூளைப் போட்டு நன்றாகக் கிளரவும்.

ஒரு கரண்டி பாலில் 1 சிட்டிகை கேசரிப் பவுடர், குங்குமப் பூ ஏலக்காய், பச்சைக் கற்பூரம் இவற்றைப் போடவும்.

ஜாதிக்காயை நெய்யில் வறுத்து, பொடி செய்து, அதையும் பாலில் சேர்த்துக் கரைத்து பொங்கலில் சேர்க்கவும்.

இப்போது நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரிப் பருப்பு இவற்றைச் சேர்க்கவும்.  

ஒரு கரண்டி நெய்யை விட்டு நன்றாகச் சிறிது நேரம் கிளறியபின் இறக்கி வைக்கவும்.

மணக்கும் இனிக்கும் சர்க்கரைப் பொங்கல் தயார்.

 

Advertisements