A Song on Shri Madhurakali Amman of Siruvachur

Standard

ராகம்: ஹம்சாநந்தி

பல்லவி

மதுரகாளி மாதவன் சோதரி

மனமிரங்கி வருவாய். அம்மா…             (மதுரகாளி)

அனுபல்லவி

திங்களும் வெள்ளியும் வந்திறங்கி வணங்கும்

மங்கள நாயகி எங்களை ஆதரி            (மதுரகாளி)

சரணம்

சீர்மிகு சிறுவாச்சூர் அமர் தாயே

செல்லியும் சோலையும் சூழருள்வாயே

கார்வண்ணன் மதனகோபாலனும் ஈசனும்

பிரம்மனும் இணைந்தே போற்றிடும் மாயே    (மதுரகாளி)

Raag: Hamsanandi

Raag: Hamsanandi

PALLAVI

Madhurakali, Madhavan Sodhari

Manamirangi varuvai, Amma (Madhurakali)

ANUPALLAVI

Thingalum Velliyum vandhirangi vanangum

Mangala nayaki engalai aadhari (Madhurakali)

CHARANAM

Seermigu Siruvachur amar thaaye

Selliyum Solaiyum Soozharulvaye

Kaarvannan Madanagopalanum Eesanum

Brahmanum Inaindhe Potriduum Maaye

(Madhurakali)

 

Oh, Madhurakali, the sister of Lord of Vishnu

Come to us taking pity on us, Oh Mother

Oh goddess of all bliss to worship whom Lord Soma (the moongod) and Lord Shukra (Venus) descend to your temple, please protect us.

Oh mother who is seated in the serene Siruvachur

And who, flanked by Selli and Solai, blesses the devotees

You are the one, who is praised by

Madana Gopala, Shiva and Brahma together.

Notes
Reference to Soma and Shukra as the temple is open only on Mondays and Fridays.
Selli and Solai are the other deities, who as per legend, were the original presiding deities of the temple till Madhurakali decided to stay there along with them.
Madana Gopala, Brahma & Eesha refer to the presiding deities in Perambalur where Shiva is called Brahmapuriswara and Vishnu as Madana Gopala. (Perambalur, the district headquarters) is close to Siruvachur. Its ancient name was Brahmapuri.)
Advertisements

13 responses »

 1. Besides there are certain Stotras too. I had heard this earlier also and it is available in our house too. Nice for having posted it.

  Balasubramanian NR

 2. Yesterday i.e. 5.2.15, Shri Yesudas Carnatic Musician along with his family Members visited the temple and attended the Mahabishegam. He sang a song in praise of the Goddess in the temple.

 3. அம்பிகைதான் குரு என ஸௌந்தர்யலஹரியில் பகவத்
  பாதாள் சொல்லியுள்ளார். இதனையே பஜகோவிந்தத் திலும் குரு சரணாம்புஜ என சொல்லியுள்ளார். அம்பாளை உணர வேண்டுமானால் நாம் ஐந்து இந்திரியங்களையும் மனதையும் அம்பாளின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  அப்படி என்றால் நம் உள்ளே இருக்கும் தெய்வத்தன்மையை நிஜமான அம்பாளின் ரூபத்தைப் பார்க்க முடியும். பக்தர்க்கு நாளும் தானே தான் அனைத்தும் என அழகாக காட்டுகின்றாள், தோன்றுகின்றாள், வாழ்த்தியே காக்கின்றாள். வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை என்று சொல்லியுள்ளார். அம்பாள் தியானம், தரிசனம் மனதை, உடலைப் புதுப்பித்துத் தெளிவுபடுத்துகிறது. சஞ்சலத்தையும் அகற்றுகிறது. அவளை எவனொருவன் நம்பித் தனியாக இருக்கும்போது மௌனமாயும் மறைவாயும் கண்ணெடுத்துப் பார்க்கிறாள். வாஸ்தவமான சொல். இதை உணர வேண்டும்.

 4. வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய உலக சிறப்புமிக்க அம்பாள் ஸ்தலம். ஸ்ரீ மதுரகாளியினுடைய திருவடிகளாகிய தாமரைமலர்களுக்கு அழகான மலர் போட்டு துதிக்கிறேன். அவள் அருள் ஆரோக்கியத்தை அளித்து மேம்படுத்தும். அவள் அருளால் நிவ்ருத்தி மார்க்கம் உண்டு. பக்தர்களுக்குப் பலவிதமான ஆசைகள் இருக்கின்றன.அவற்றை நிறைவேற்றிக் கொள்வதென்றால் அவள் திருப்பாதம் பணிந்து வேண்ட வேண்டும். ஒவ்வொருத்தரும் தன்னிஷ்டப்படியே பண்ணி கஷ்டத்தில் அழுந்திவிடாமல் தர்மமாக இருக்க வழியமைத்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் ச்ரேயஸை அடைய, க்ஷேமமடைய, ஸந்தோஷத்தைப் பெற, சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். மோக்ஷம் வேறு, ஸ்வர்கம் வேறு. மோக்ஷம்தான் ஸம்ஸாரத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறும் ஸ்தானம். “ஸ்ரீ மதுராம்பிகா” என்ற நாமம் ஒரு முறை சொன்னாலும் பலனுண்டு.

 5. உபதேசம் வாங்கிக் கொண்டு ஆவலுடன் சாட்சாத் அம்பாளின் பாதத்தில் ஐந்து இந்திரியங்களையும் சமர்ப்பிக்க நினைத்து தெய்விக ஞானத்துடன் அம்பாளின் திருநாமம் பய பக்தியுடன் என் நாவில் நடமிட, ஒருத்தர் எத்தனை பேருக்கு இந்த பாக்யம் கிட்டும் என கூற, அவளுடைய திருப்பாதங்களில் நமஸ்காரம் பண்ண சிறுவாச்சூர் சென்று வந்தோம். அம்பாள் நாமம் நமக்குத் துணையாயிக்கும்போது பிரதிகூலமான மற்றவைகள் நமக்கு என்ன கேடு செய்யவல்லது! உறுதியான உள்ளத்தோடு பக்தி ஒருவித மயக்கத்தை உண்டு பண்ணுகிறது. மாறாத பக்தி என்னும் காந்தத்தால் இழுக்கப்படுகிறது. மனதைத் தூயதாக்கி உறுதியான உள்ளத்தோடு சுயநலத்தை அகற்றும் செயல்களெல்லாம் புண்ணிய செயல்கள் ஆகின்றன. சிறுவயதிலேயே சிலாரூபங்களை நாள் தவறாமல் பூஜித்து வந்ததால் உணர்வு பூர்வமான பக்தி ஆன்மாவுடன் கலந்து நிரந்தர இடம் அளிக்கிறது. உயிரோடு ஒட்டிக் கொண்டுவிடுகிறது. உட்காரும்போதும் எழும்போதும் உந்தன் நாமம் ஸ்மரித்தல் தாயே. என் க்ருஹ வாயிலில் அம்பாளின் ப்ரகாசமான அழகுப் ப்ரவாக சொரூபம். அம்பாளின் கண்களும் சதா தன் குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா என சுற்றி சுற்றித் தன் கருணா கடாக்ஷத்தால், பார்வையைச் சுழல விடுகிறாதாக என் நம்பிக்கை. பிரார்த்தனை செய்யுங்கள். தன்னைக் காண வந்த பக்தருக்கு அன்போடு காப்பாற்றும் என்று உறுதி, தடைகளற்ற நெஞ்சிற்கு நிம்மதி. அவள் பொற்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

 6. அம்பாளுடைய தாம்பூலத்தில் புன்சிரிப்பு பார்க்கலாம். அம்பாளின் தாம்பூல ரஸத்தைப் பருகியவர்கள் மிகப்பெரிய கவிஞர்கள் ஆவார்கள். காளிதாஸர், காளமேகப் புலவர், ஏன் ஆதி சங்கரர் கூடதாம்பூலச் சுவையால் கவித்வம் அடைந்தவர் ஆவார்கள். அம்பாள் தாம்பூலம்தான் நமக்குக் கிடைக்கட்டுமே. அம்பாள் தன் மதுரமான பேச்சினால் தோற்கடிக்கிறாள். இனிமை என்பது அம்பாளின் “ஸ்ரீ மதுராம்பிகா” மொழிகளில்தான் மந்தஹாஸமான சிரிப்பில் இருக்கிறது. ஒப்பிட்டுக் கூற முடியாத அழகைக் கொண்டவள் அதனால் ப்ரகாசிக்கிறாள்! தங்கத் தோள்வளைகளால் அலங்கரிக்கப் பட்டவள் ஜய ஜய ஜகதம்பிகே ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிகா தாயே.

 7. எங்கள் இல்லம் செழித்திட உள்ளம் மகிழ்ந்திட அருள்வாய் ஸ்ரீ மதுராம்பிகா தாயே. பக்தியுடன் நினைத்து பிரார்த்திக்கின்ற வரங்களை அள்ளித் தந்திடும் தாயே. இருவிழியாலே பார்த்துக் காத்து என்றும் துணையாய் இருப்பதும் நீயே. உன் திருப்பதம் பணிந்தேன், திருவருள் வேண்டுகிறேன், உன் திருநிழலில் இருவிழியாலே பார்த்துக் காத்து, வாழ்த்தி, என்றும் துணையாய், இருக்க அருள்வாய் எங்கள் குலத்தாய் நீ தானே. மதுர மலை கோயில் உணர்ந்தோர்க்கு சொல்ல ஒண்ணாத தலம். சொல்ல வொண்ணா ஒளி. அம்பாளின் திருக்கோயிலை சென்று அடைவோம். ஜய ஜய ஜகதம்பிகே ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிகா தாயே.

  Pranams. I have so far written about more than 250 views about the Ambal, as I am directed by HER to do that in my dream at frequent intervals. I humbly submit that I am around 71 years old
  and nearing 72. It is HER wish that I should render my views with all humility to the info of Devotees. Om Shri Siruvakshyai Namaha

 8. சாந்த நிலையில், வாஸ்தவத்தில், விச்வரூப தர்சனம் காலை 06.30 மணி. அம்பாளைக் காண ஒரே ஜனங்கள் நிற்பார்கள். துஷ்ட ஜன ஸம்ஹாரத்திற்கு (சத்ருக்களை வதம் பண்ணி தர்ம மார்க்கத்தில்) மட்டுமே வந்த அம்பாள், சாந்தமாக, (உக்ரகரூபத்தில் இல்லை) ஹிதமாக, ஸர்வ லோகத்திற்கும் வாழ்க்கையின் ஓயாத சஞ்சலங்களிலிருந்து ஓய்வு தருகிறாள். விச்வரூபத்தை, அம்பாள் கண்ணைப்பார்த்தால் தைர்யம் வரும். வர்ணிக்க வார்த்தை இல்லை. மிகைப்படுத்திச் சொல்ல வில்லை. நமக்கு வேண்டியது, நம்மால் முடிந்தது. விச்வரூப தர்சனத்தின் போது என் மனஸில் அம்பாளை பற்றி, லயித்து, ஸங்கல்பம், ஒரு ஸத்கார்யம், அமைதியில் இல்லாதவர்களுக்கும் நாமே பக்தியுடன் நினைத்து பொறுப்புடன் பண்ணிவிடலாம். அம்பாள் சாந்த ஸ்வரூபியாக ஜனங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் ஆயுள் காலம்பூரா, அதர்ம சக்திகளை அழித்து, ஸஹாயம் செய்ய காப்பதான ரக்ஷணம் செய்கிறாள். எல்லாருடைய ஹ்ருதயத்திலும் இருக்கிறாள். அவளுடைய பெருமை ஸாதனா மார்க்கத்தில் போகிறவர்களுக்கு மட்டுமே தெரியும். அவளையே சரண் அடைய வேண்டும் என்பது என் லக்ஷயம். ஜய ஜய ஜகதம்பிகே ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிகா தாயே.

 9. சல சல சலங்கை காலில் ஒலிக்க பக்தன் பிடியில் பாசம் கொண்டாள். ஆசை கொண்ட அருள்மிகு ஶ்ரீமதுரகாளியம்மன் எந்தன் மடியினிலே புன்னகையுடன் தூக்கம் கொண்டாள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s