வெண் பொங்கல்

(இரண்டு பேருக்காக)

VENN PONGAL

(For two persons)

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 200 கிராம்

பயற்றம் பருப்பு – 1 கரண்டி

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு

முந்திரிப் பருப்பு – 6/8

உப்பு – தேவையான அளவு

நெய் – 1 கரண்டி

Required Items

Raw Rice – 200 grams

Green gram (Moong daal) – 1 big spoon (about 50 gms)

Black Pepper – Half Spoon

Cumin Seeds (Jeerakam/Jeera): Half Spoon

Ginger – 1 small piece

Cashew Nuts (broken) – 6 to 8

Salt – As required

Ghee (clarified butter) – 1 spoon

விரும்பினால்

கருவேப்பிலை – 4/5 இலைகள்

பச்சை மிளகாய் – 1

Optional

Curry Leaves – 4 or 5 leaves

Green Chilly – 1 (Medium hot)

தயாராகுங்கள்

இஞ்சி, கருவேப்பிலை, பச்சைமிளகாய் இவற்றைக் கழுவி வைத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியைத் தோல் நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு குறுக்காக நறுக்கிக் கொள்ளுங்கள்.

மிளகுகளை உடைத்துக் கொள்ளலாம். ஆனால் காரம் அதிகமாக இருக்கும்.

முந்திரிப் பருப்புகளைச் சிறிது நெய்யில் தனியாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அரிசியையும் பயற்றம் பருப்பையும் தனித்தனியாகக் கழுவி (களைந்து) வைத்துக் கொள்ளுங்கள்.

அரிசி, பருப்பு இவற்றின் இரண்டு மடங்கு நீரைத் தயாராக வைத்திருங்கள். பொங்கல் குழைவாக வேண்டும் என்றால் நீரின் அளவை அதிகப் படுத்திக் கொள்ளலாம்.

Get Ready

Wash ginger, curry leaves and chilly.

Cut ginger in to small pieces after removing skin.

Cut the chilly across after removing its stalk.

(You can break the pepper, if you like your Pongal very spicy.)

Roast the cashew nuts in ghee separately.

Wash rice and green gram separately.

Keep double the amount of water ready. (Water can be more if you want the pongal to be more cooked).

சமையுங்கள்

சிறிது நெய்யைச் சூடு செய்து மிளகு, சீரகம், இஞ்சி, மிளகாய் இவற்றை இதமாக வறுத்துக் கொள்ளுங்கள். கடைசியாகக் கருவேப்பிலையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு, களைந்த அரிசி, பருப்பு மற்றும் முந்திரிப் பருப்பு இவைகளைச் சேர்த்து பின்னர் நீரையும் சேருங்கள். இப்போது உப்பையும் சேருங்கள்.

இந்தப் பாத்திரத்தை ஒரு தட்டு வைத்து மூடி குக்கரில் வைத்து உங்களுக்கு விருப்பமான குழைவுப் பதம் வரும் வரை அதாவது 4 முதல் 6 ஓசை வரும் வரை வேக வையுங்கள்.

குக்கரை அணைத்த பிறகுச் சற்று நேரம் கழித்துப் பாதுகாப்பாகத் திறந்து பாத்திரத்தை அகற்றி கரண்டியால் நன்றாகக் கிளறி விடுங்கள். விரும்பினால் கிளறுவதற்கு முன் மிளகாயை எடுத்து விடலாம். மேலாகத் தான் இருக்கும்.

தேவையென்றால் விருப்பப் படி தனியாக மேலும் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

பொங்கலைக் குக்கரில் நேராகச் சமைக்கலாம். ஆனால் நெய்யும் பருப்புக் குழைவும் குக்கரின் மேல் துளை வழியாகப் பீறிட நேரலாம். அதனால் குக்கருக்குள் தனிப் பாத்திரத்தில் மூடி வைப்பது பாதுகாப்பாக இருக்கும்.

Cook Now

Heat ghee on a small tava and lightly fry pepper, cumin seeds, ginger and chilly. Add curry leaves at the last.

Put these in a vessel and add the washed rice, green gram, cashew nuts and water. Add the salt.

Keep the vessel inside pressure cooker and close the vessel with a lid and allow it to cook for 4 to 6 sounds depending on your taste on how well cooked the Pongal should be and then switch the stove off.

When it is safe, open the pressure cooker and remove the vessel and stir the cooked pongal well. If you want you can remove the chilly before stirring.

You can add more ghee separately depending upon individual taste.

You can also cook Pongal in pressure cooker directly without using a vessel. But ghee and softened green gram may spill over the top through the cooker weight causing inconvenience. Separate vessel will therefore be safer.

For Sarkarai Pongal recipe click here. சர்க்கரைப் பொங்கல் செய்முறைக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Advertisements