தமிலும் தமிலனும்.

 தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பவர்களாகவும், அறிவிப்பாளர்களாகவும், தொகுப்பாளர்களாகவும் இருக்க குறைந்த பட்சத் தகுதி என்னவாக இருக்க வேண்டும்?

 தமிழைச் சரியாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் டீவீ சேனல்களின் நிலைமை நம் அனைவருக்கும் தெரியும். புதிய தமிழ்த் தாத்தாவின் சேனல் கூட இதற்கு விதி விலக்கல்ல.

 தொகுப்பாளர்களைக் கூட மன்னிக்கலாம். ஆனால் செய்தி வாசிப்பவர்கள் உச்சரிப்பில் சொதப்பினால் பல சமயங்களில் மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். ஆனால் சில சமயம் காமெடியாகவும் இருக்கும்.
நேற்று ஜெயா பிளஸ்ஸில் செய்தி இப்படித்தான் காமெடியாக இருந்தது.

 எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை கலகப் பொதுச்செயலாளர் கலகக் கொடியை ஏற்றித் திறந்து வைத்தார். இந்நிகல்ச்சியில் கலகப் பாராளுமன்ற உருப்பினர்களும் கலகச் சட்டமன்ற உருப்பினர்களும் கலந்து கொண்டனர். ” – இப்படித்தான் படித்தார். தமாஷாக இல்லை?

Advertisements