புதிதாகத் தமிழில் தொடங்கப் பட்டிருக்கும் ‘இந்து’ (ஹிந்து என்று சொல்லிக் கொள்ள இவர்களுக்குச் சற்று வெட்கம்தான்) நாளிதழ் “அலசி” எழுதியிருக்கும் கட்டுரைத் தொடரிலிருந்து சில பகுதிகள் (தி இந்து – 11.03.2014) அப்படியே இதோ:

இடது சாரிகள் இல்லாமல் மத்தியில் யாரும் அரசு அமைத்துவிட முடியாது என்று அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் ‘முழங்கிய’ போதும், பிற்பகலில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் அதிமுகவை தூற்றியும், கேலி செய்தும் வசனங்கள் பேசப் பட்ட போதும் அரங்கம் ஆரவாரத்தால் “அதிர்ந்தது”.

“கால்படி நெல் அதிகமாக கூலி கேட்டதற்காக 44 உயிர்கள் கொளுத்தப்பட்டபோது நிலவிய அதே உத்வேகத்தோடு எழுந்திருக்கிறார்கள் மார்க்ஸிஸ்டுகள்.”

“சொல்லி அடித்திருக்கிறது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி”.

இந்த ‘செய்தி’யைப் படித்த பிறகு அவசரமாக முதல் பக்கத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டியதாயிற்று – நான் படிப்பது ‘இந்து’வா அல்லது ‘தீக்கதிரா’ என்று சரி பார்த்துக் கொள்ளத்தான்!

இந்தப் போலி இந்து, போலி மதச்சார்பின்மையுடன் போலி நடுநிலைமையையும் கடை பிடிப்பது தெளிவாகவே இருக்கிறது!

Advertisements