ஸ்டாலின் பொய் சொல்லுகிறார். இந்து எதிர்ப்பாளர்கள் இல்லை என்றால் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லிவிட்டு பின்பு அதை என் வலைத் தளத்திலிருந்து நீக்கினார்? திமுகவை இந்து மத எதிர்ப்பாளர்கள் என்றும் சொல்லுவது அவர் கட்சியிலிருக்கும் இந்துக்களின் எண்ணிக்கையைப் பொருத்தல்ல. அதன் பிறப்பிலிருந்தே தொடர்ந்து அந்தக் கட்சியின் இந்து விரோத நடவடிக்கைகளைப் பொறுத்தே. குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவர் திரு கருணாநிதி இந்துக்களைப் பலவிதங்களில் இழிவு படுத்தியிருக்கிறார். இந்துக்களைத திருடர்கள் என்று அழைத்தார். அவரும், அண்ணாதுரை போன்ற தலைவர்களும் இந்துக் கடவுள்களையும் வழக்கங்களையும் பற்றி ஆபாசமாகக் கதைகளும், கட்டுரைகளும், நாடகங்களும் ஆக்கியிருக்கிறார்கள். விநாயகர் சிலைகளைச் செருப்பால் அடித்துக்கொண்டும், கடவுளர்கள் படங்களுக்கும் செருப்பு மாலைகளை அணிவித்தும் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அளித்தார். அதன் புகைப் படங்களை வெளியிட்ட துக்ளக் இதழைத் தடை செய்து வெளியான இதழ்களை பறிமுதல் செய்தார். திமுக உறுதி செய்யப்பட்ட இந்து விரோதி. மதத்தைப் பற்றி எண்ணாமல் அவர் கட்சிக்கு வாக்களிக்கும் இந்துக்கள் உயர்ந்தவர்கள். ஆனால் ஏமாளிகள்.

Advertisements