திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் பொய்யும் உண்மை போலவே தோன்ற ஆரம்பிக்கும். மராத்திய “பகுத்தறிவு” வாதியான நரேந்திர தாபோல்கர் கொல்லப்பட்டபோது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தது காங்கிரஸ். கல்புர்கி கொல்லப்பட்ட கர்நாடகத்திலும் தற்போது காங்கிரஸ் ஆட்சியே. தற்போது நடந்த துரதிருஷ்டவசமான கடும் தண்டனை வழங்கப்பட வேண்டிய மாட்டுக்கறி கொலைகளும்  சமாஜ்வாதி கட்சி ஆளும் உபியிலும் காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சலத்திலும் நடந்திருக்கின்றன.  ஒரு கொலை சம்பவத்தில் மத்திய அரசு என்ன செய்ய முடியும்? துப்பறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசு தானே? மாநில அரசு பரிந்தளித்தால் தவிர அதில் மத்திய அரசு தலையிட முடியுமா? வளர்ச்சித் திட்டங்களிலும் ஆக்கபூர்வமான பணிகளிலும் அரசை கவனம் செலுத்தவிடாமல் இடது சாரி சக்திகளாலும் தேச விரோத சக்திகளாலும் திட்டமிட்டு மிகத் திறமையாக நடத்தப் படும் பிரசாரங்களில் ஒன்றே இந்த சாஹித்திய அகாடமி விருது திருப்பும் பணி. இந்த சக்திகள் வெளிநாடுகளிலும் இந்திய தேசத்துக்கு அவமானம் தேடித் தரும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருப்பது நமது நாட்டின் மிகப்பெரிய சோகம்.

Advertisements