நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி.

 

*****

 

இன்றைய தமிழ் ‘இந்து’வில் (‘ஹிந்து’ என்று சொல்லிக் கொள்ள இந்தப் பத்திரிகை வெட்கப்படுவது நாம் அறிந்ததே) வந்துள்ள செய்தியின் தலைப்பையும் அதை அளித்திருக்கும் விதத்தையும் முதலில் கவனியுங்கள்.

 

*******

 

தாவூத் இப்ராஹிம் காருக்கு இந்து மகாசபா தலைவர் தீ வைப்பு

 

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் காரை ஏலத்தில் எடுத்த இந்து மகா சபா தலைவர் நேற்று அதை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

மும்பையில் கடந்த 9-ம் தேதி நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கார், வீடு ஆகிய சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய தலைவரான சுவாமி சக்ரபாணி என்பவர் தாவூத் இப்ராஹிம் காரை ஏலத்தில் எடுத்தார். அப்போது தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான சமிக்ஞையாக தாதா தாவூத் இப்ராஹிம் காரை தீயிட்டு கொளுத்தப்போவதாக தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட அந்த கார் சக்ரபாணியிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள இந்திரபுரம் என்ற ஊருக்கு எடுத்துச் சென்று, நேற்று அந்த காருக்கு தீ வைத்து கொளுத் தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

*****

 

இத்துடன் இந்துவின் செய்தி முடிகிறது. ஆனால் இந்து சொல்லாததும் இருக்கிறது. அதை நான் இந்துவின் வலைத்தளத்தில் வாசகர் கருத்தாக கீழ்கண்டவாறு பதிந்திருக்கிறேன். இந்து நிச்சயம் அதனை வெளியிடாது.

 

“ஹிந்து மகாசபையினர் அந்தக் காரை எரித்தபோது அவர்களுடன் உத்தரப் பிரதேச ஜமியத் உலேமா ஏ ஹிந்த் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து உடன் இருந்தனர். இதை துபாயிலிருந்து வெளிவரும் கல்ஃப் நியூஸ் பத்திரிகை கூறியிருந்தது. ஆனால் “மதச்சார்பற்ற” இந்துவில் கூறப்படவில்லை. இதன் உள்நோக்கம் என்ன? கீழே உள்ள சில வாசகர் கருத்துக்கள் போல் தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் மேல் வெறுப்புணர்ச்சி பரவ வேண்டும் என்பதுதானா? ஆனால் அதே நேரத்தில் முஸ்லீம் அமைப்புகளின் மேலும் முஸ்லீம்களின் மேலும் நல்லெண்ணம் பரவுமே. அதைக்கூட தியாகம் செய்ய இந்து பத்திரிகை தயாராக இருக்கிறதா? பாரம்பரியம் மிக்க இந்து குழுமம் வெட்கப்பட வேண்டும். (வழக்கம் போல உங்கள் “கருத்துச் சுதந்திரக்” கொள்கை வாசகர்களின் கருத்துக்களுக்கு பொருந்தாது என்பதையும், இந்தக் கருத்தை வெளியிடும் துணிவோ நேர்மையோ தங்களிடம் இல்லை என்பதையும் நான் அறிவேன்.)

 

Advertisements