ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். மோதி அவர்கள் வெளிநாடு சென்றால் எப்போதும் சனி ஞாயிறு கிழமைகளை உள்ளடக்கிய வார இறுதியிலேயே செல்லுகிறார். வார நாட்கள் முழுவதும் பணி புரிந்து விட்டு, வார இறுதியையும் வீணாக்காமல் அந்நாட்களில் தனது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார். தான் பணியாற்றுவது அல்லாமல் சனி ஞாயிறு விடுமுறைகளை புனிதமாகக் கருதும் மேல்நாட்டு தலைவர்களையும் அதிகாரிகளையும் கூட அந்நாட்களில் பணியாற்ற வைக்கிறார். இப்படி ஒவ்வொரு செயலையும் பார்த்துப் பார்த்து செய்கின்ற பிரதமருக்குத்தான் எத்தனை எதிர்ப்புகள் கண்டனங்கள். நமது நாடு எப்படி முன்னேறும்?

Advertisements